/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெயில் தாக்கம் குறைய விளக்கு பூஜை
/
வெயில் தாக்கம் குறைய விளக்கு பூஜை
ADDED : ஏப் 11, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: வெயில் தாக்கம் குறைய, நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில், பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில், வெயிலின் தாக்கம் குறைந்து மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். அதையொட்டி, பூலோகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். பூஜைகளை குமார், ஹரிபிரபா, முருகானந்தம் குருக்கள் செய்தனர்.

