/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு
/
வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு
வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு
வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு
ADDED : ஏப் 25, 2024 03:44 AM
கடலுார்: லோக்சபா தேர்தலையொட்டி வெளிமாநில தொழிலாளர்கள் ஓட்டளிக்கும் வகையில், அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, தொழிலாளர் உதவி ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
லோக்சபா தேர்தல் வரும் 26ம் தேதி கேரளாவிலும், கர்நாடகத்திலும், மே மாதம் 13ம் தேதி ஆந்திராவிலும் நடக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 13 5(பி) யின்படி தேர்தல் தினத்தன்று, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடலுார் மாவட்டத்தில் பணிபுரியும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள், சொந்த மாநிலம் சென்று ஓட்டளிக்கும் வகையில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், அனைத்து வங்கி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் நாளன்று பணிக்கு வராதபணியாளர்களின் சம்பளத்தில் இருந்து எந்த வித பிடித்தமும் செய்யக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

