
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் ஒன்றியத்தில்,15 வயதிற்கு மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு,புதிய பாரத எழுத்தறிவுதிட்டத்தின் கீழ் எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை வட்டார வளமைய அலுவலத்தில் நடந்த பயிற்சி முகாமில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார்தலைமை தாங்கி,கற்போர்களுக்கான கையேடுகளை வழங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் வரதராஜபெருமாள்,பிரபுஆகியோர், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். முதற்கட்டமாக 40 எழுத்தறிவு மைய தன்னார்வலர்களுக்குபயிற்சி அளிக்கப்பட்டது.