/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் லோக்அதாலத் ரூ.91.99 லட்சம் தீர்வு
/
விருதையில் லோக்அதாலத் ரூ.91.99 லட்சம் தீர்வு
ADDED : ஜூன் 10, 2024 01:07 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 225 வழக்குகள் முடிக்கப்பட்டு, 91 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத் ) நடந்தது. மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி கவுதமன், கூடுதல் சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி, முதன்மை உரிமையியல் நீதிபதி சுரேஷ், மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி, மூத்த வழக்கறிஞர் அய்யாசாமி ஆகியோர் அடங்கிய இரு அமர்வுகள் வழக்குகளை விசாரித்தது.
மோட்டார் வாகன விபத்துகள், சிவில், காசோலை மோசடி, நிலுவை வழக்குகள் உட்பட 225 வழக்குகளை விசாரித்து, 91 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. வழக்கறிஞர் சங்க தலைவர்கள், செயலர்கள், வழக்கறிஞர்கள், வங்கி மேலாளர்கள், சிட்பண்ட் மேலாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வதராமன் செய்திருந்தார்.