ADDED : ஜூன் 23, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று டி.வி.புத்துார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், ராஜசங்கர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
