ADDED : ஜூன் 04, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பஞ்சாசரம், தண்டபாணி, பாண்டியன், உத்திராபதி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், சுப்பராயன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நிர்வாகிகள் சரவணன், குளோப், சல்மான் பாரிஸ், இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.