/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
/
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 10, 2025 05:53 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
விழா, கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று, 10ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், 6:00 மணியளவில் பரிவார யாக சாலைகள், கடம் புறப்பாடாகி காலை 7:00 மணியளவில் குடக்கரை விநாயகர், தேரடி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
9:00 மணிக்கு பிரதான யாகசாலை நிறைவு, யாத்ரதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி, 10:30 மணிக்கு பிரளய காலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.