/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகாசக்தி மாரியம்மன் கோவில் மகோற்ச விழா
/
மகாசக்தி மாரியம்மன் கோவில் மகோற்ச விழா
ADDED : ஜூலை 23, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அகரம் ரயில்வே மெயின்ரோடு மகாசக்தி மாரியம்மன் கோவிலில், 22ம் ஆண்டு மகோற்ச விழா நடந்தது.
அதையொட்டி, கடந்த 18ம் தேதி கொடியேற்றப்பட்டது. 19ம் தேதி சக்தி கரகம் புறப்பாடு, சாகை வார்த்தல், அம்மன் வீதியுலா நடந்தது.
முக்கிய விழாவான நேற்று முன்தினம் இரவு விநாயகர், சிவன் சக்தி, பச்சைக்காளி, பவளக்காளி, 8 கை காளி, மாரியம்மன் மருளாட்டத்துடன் ஊஞ்சள் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை, பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் செய்திருந்தனர்.