/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சிதம்பரத்தில் மகிளா காங்., பேரணி

ADDED : செப் 01, 2024 06:41 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில், மளிளா காங்., சார்பில், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி நடந்தது.
கடலூர் தெற்கு மாவட்ட மகிளா காங்., சார்பில், சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து துவங்கிய பேரணியை மாநில மகிளா காங்., தலைவி சையது அசினா துவக்கி வைத்தார். முன்னதாக காந்தி மற்றும் ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தார்.பேரணி, எஸ்.பி.கோவில் தெரு, போல் நாராயணன் தெரு, மாலைகட்டித்தெரு, உமையாள்சந்து வழியாக கீழவீதியில் உள்ள காமராஜர் சிலையை அடைந்தது.
நிகழ்ச்சிக்கு மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பீவி, மாநில ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம், மாவட்ட தலைவிகள் லாவண்யா, புஷ்பா, வேலூர் மாவட்ட தலைவி கோமதி, காங்., மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், தலைமைக்கழக பேச்சாளர் மோகன்தாஸ், தேர்தல் பொறுப்பாளர் திருமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு ஷாஜகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.