/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பன்னீர் கரும்புக்கு மாற்றாக மக்காச்சோளம; குள்ளஞ்சாவடி விவசாயிகள் அசத்தல்
/
பன்னீர் கரும்புக்கு மாற்றாக மக்காச்சோளம; குள்ளஞ்சாவடி விவசாயிகள் அசத்தல்
பன்னீர் கரும்புக்கு மாற்றாக மக்காச்சோளம; குள்ளஞ்சாவடி விவசாயிகள் அசத்தல்
பன்னீர் கரும்புக்கு மாற்றாக மக்காச்சோளம; குள்ளஞ்சாவடி விவசாயிகள் அசத்தல்
ADDED : ஜூன் 20, 2024 08:43 PM

குள்ளஞ்சாவடி : பன்னீர் கரும்பு கொள்முதல் குளறுபடியால், குள்ளஞ்சாவடி பகுதியில், மாற்று பயிராக மக்காச்சோளத்திற்கு மாறியுள்ளனர்.
குள்ளஞ்சாவடி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பன்னீர் கரும்பு அதிக அளவில் ஆண்டாண்டு காலமாக பயிரிடபபட்டு வந்தது. இப்பகுதிகளில் விளையும் பன்னீர் கரும்புகளை, வியாபாரிகள் பொங்கல் பண்டிகையின் போது கொள்முதல் செய்து, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வந்தனர். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி ஆண்டில், அரசு சார்பில் பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் பன்னீர் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கரும்புகள் முழுவதையும் விற்பனை செய்து நிம்மதி அடைந்தனர். அடுத்து வந்த தி.மு.க, ஆட்சியில் முதலாண்டு வழக்கம் போல கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்னீர் கரும்பு முறையாக கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டனர்.
2022ம் ஆண்டு அரசின் கொள்முதல் முடிவால் பன்னீர் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், குள்ளஞ்சாவடி பகுதியில், பன்னீர் கரும்பு பயிரிடுவதை விவசாயிகள் குறைத்துக் கொண்டனர். அந்த வகையில், இந்தஆண்டு, பன்னீர் கரும்புக்கு மாற்றாக, மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளான அம்பலவாணன்பேட்டை, கட்டியங்குப்பம், கிருஷ்ணன்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் முதல் முறயைாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. கோடையில் அவ்வப்போது மழை பெய்வதால் மக்காச்சோளம் நல்ல முறையில் விளைந்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.