தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மக்காச்சோளம் மேலாண்மை பயிற்சி

மக்காச்சோளம் மேலாண்மை பயிற்சி

மக்காச்சோளம் மேலாண்மை பயிற்சி


ADDED : ஜூலை 08, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநத்தம்: மக்காச்சோளம் மேலாண்மை பயிற்சி முகாமில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

மங்களூர் வட்டார வேளாண்துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி மற்றும் மக்காச்சோளம் மேலாண்மை பயிற்சி முகாம் ராமநத்தம் அடுத்த ம.புடையூரில் நடந்தது.

மங்களூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கீர்த்தனா தலைமை தாங்கினார். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். துணை வேளாண் அலுவலர் ராமசாமி, உதவி வேளாண் அலுவலர் கணேஷ் பாலன், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ் ஆனந்த், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துசாமி, செல்லமுத்து, கிராம விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், மக்காச்சோளம் சாகுபடியில் விதை நேர்த்தி, களை மற்றும் உர மேலாண்மை, நுண்ணுாட்ட சத்துக்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us