/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் 'மாஜி' அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
/
தே.மு.தி.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் 'மாஜி' அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
தே.மு.தி.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் 'மாஜி' அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
தே.மு.தி.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் 'மாஜி' அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : ஏப் 13, 2024 04:20 AM

பண்ருட்டி: தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் ஓட்டு கேட்டு தீவிர பிரசாரம் செய்தார்.
பண்ருட்டி, தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மந்திப்பாளையம், தொரப்பாடி பேரூராட்சி வார்டுகள், அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்லாம்பாக்கம், பண்டரக்கோட்டை, ஒறையூர். ஏ.பி.குப்பம், அவியனுார், பைத்தாம்பாடி, காவனுார், எனதிரிமங்கலம், கரும்பூர், கொரத்தி, திருத்துறையூர், சின்னபேட்டை, பணப்பாக்கம், வரிஞ்சிப்பாக்கம், பூண்டி, கள்ளிப்பட்டு, கணிசப்பாக்கம் பகுதிகளில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது ஒரு குடும்ப ஆட்சி நடந்து வருகிறது. தமிழக மக்களுக்கு தி.மு.க., எந்த ஒரு நல்லதும் செய்யாமல் வஞ்சித்து வருகிறது. சுரண்டலுக்கும், ஊழலுக்கும் மறுபெயராக தி.மு.க.,வின் திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது.
இந்த தேர்தல் ஊழல், குடும்ப அரசியல், போதை கலாசாரம், சமூக விரோத செயல்களை விரட்டும் தேர்தலாக விளங்கிட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தில் மக்களின் எதிர்ப்பு தெரிகிறது. இதனால், ஸ்டாலின் எதிர்கட்சி தலைவரான பழனிசாமி மீது வன்மத்தை கக்கி வருகிறார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தவில்லை. பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வரவில்லை. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தம் செய்யவில்லை. ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கவில்லை. வாக்குறுதிகள் ஏதுவும் நிறைவேற்றாமல் பொய் மட்டும் மூலதனமாக கொண்டு தி.மு.க., செயல்படுகிறது. 14 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.
எனவே, நமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதரவு பெற்ற தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்திற்கு ஓட்டு போட்டு பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேசினார்.
முன்னாள் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் தேன்மொழி தேவநாதன், சுந்தரிமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாபு புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

