/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்யுங்கள்: மாஜி., அமைச்சர் சம்பத் பிரசாரம்
/
சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்யுங்கள்: மாஜி., அமைச்சர் சம்பத் பிரசாரம்
சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்யுங்கள்: மாஜி., அமைச்சர் சம்பத் பிரசாரம்
சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்யுங்கள்: மாஜி., அமைச்சர் சம்பத் பிரசாரம்
ADDED : ஏப் 12, 2024 12:00 AM

பண்ருட்டி : தே.மு.தி.க.வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.
கடலுார் தொகுதி தே.மு.தி.க., வேட்பளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் நேற்று பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சூரக்குப்பம் கிராமத்தில் இருந்து துவங்கி பூங்குணம், கந்தன்பாளையம், எல்.என்.புரம், கொக்குப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம், மணப்பாக்கம், சேமக்கோட்டை மற்றும் தொரப்பாடி பேரூராட்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தனர்.
சிறுவத்துாரில் நடந்த பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் சம்பத் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா வழங்கிய தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா மினி கிளினிக், விலையில்லா ஆடு, விலையில்லா மிக்ஸி கிரைண்டர், விலையில்லா லேப்டாப் என பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. தமிழக முதல்வராக பழனிசாமி இருந்தபோது, ஏழை மாணவர்கள் படிக்க இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
ஆனால், தி.மு.க.அரசு பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. எந்த திட்டமும் தி.மு.க., விடம் இல்லை. தமிழகம் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடைக்கலம் கொடுக்கும் மாநிலமாக மாறி வருகிறது. இந்த தேர்தலில் தி.மு.க., விற்கு பாடம் புகட்ட வேண்டும்.
எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க.,வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு கொட்டும் முரசு சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு சம்பத் பேசினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், பண்ருட்டி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவா, வழக்கறிஞர் அணி ஆனந்தன், தே.மு.தி.க., அவைத் தலைவர் ராஜாராம், ஒன்றிய செயலாளர் சிவராமன், அ.தி.மு.க,, ஒன்றிய செயலாளர் ராமசாமி, தே.மு.தி.க., அவைத் தலைவர் ராயர், பேரூராட்சி அவைத் தலைவர் சுந்தரம், ஊராட்சி தலைவர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கலியபெருமாள், அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

