/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபைல் போன் கடையில் திருட முயன்றவர் கைது
/
மொபைல் போன் கடையில் திருட முயன்றவர் கைது
ADDED : பிப் 22, 2025 10:20 PM
கடலுார் : மொபைல் போன் கடையில் திருட முயன்ற வேலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 29; கடலுார்லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதை அருகில் மொபைல் போன் கடை வைத்துள்ளார்.இவரது கடைக்கு வெளியூரில் இருந்து கடலுார் பஸ் நிலையத்திற்கு மொபைல்போன் உதிரிபாகங்கள் வந்துள்ளது. இதை வாங்குவதற்காக நேற்று அதிகாலை 5:00
மணியளவில் ராஜ்குமார், கடை ஊழியர்களுடன் கடைக்கு வந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து, வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அவரிடம் விசாரித்தபோது, வேலுார் மாவட்டம் கார்த்திகேயபுரத்தை சேர்ந்த பாண்டியன், 33; என்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து பாண்டியனை கைதுசெய்தனர்.

