/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு பலே ஆசாமி கைது: 6 சவரன் மீட்பு
/
பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு பலே ஆசாமி கைது: 6 சவரன் மீட்பு
பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு பலே ஆசாமி கைது: 6 சவரன் மீட்பு
பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு பலே ஆசாமி கைது: 6 சவரன் மீட்பு
ADDED : மார் 04, 2025 07:02 AM

சிதம்பரம்; சிதம்பரத்தில் வீட்டை உடைத்து நகை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்து, 6 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம், விபீஷ்ணபுரம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் பட்டுசாமி மனைவி சுலபா, 72; இவர் கடந்த 26ம் தேதி, மகா சிவராத்திரி அன்று, வீட்டை பூட்டிவிட்டு, நடராஜர் கோவிலுக்கு சென்று மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின், முன் கதவு, உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில், கண்ணாடி பக்கத்தில் வைத்திருந்த 6 சவரன் செயின் காணாமல் போய் இருந்தது. அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தில்லை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ், 44: திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
ராஜேஷ்சை கைது செய்த போலீசார், 6 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.
ராஜேஷ் மீது சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் வீட்டை உடைத்து திருடிய 20 வழக்கு உட்பட 40 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.