ADDED : ஜூலை 16, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த ஆலடி பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை கத்தியை காட்டி பொது மக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர், குருவன்குப்பம், தங்கதுரை மகன் ரெட் (எ) ராஜதுரை, 26, என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, ராஜதுரையை கைது செய்தனர்.
