/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் பள்ளியில் மேலாண் குழு கூட்டம்
/
பெண்ணாடம் பள்ளியில் மேலாண் குழு கூட்டம்
ADDED : ஆக 08, 2024 11:43 PM
பெண்ணாடம்: பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுதா, மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர் சங்கம் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பள்ளிக்கு புதிதாக அறிவியல் கருவிகள் மற்றும் வேதிப்பொருட்கள் வாங்குவது, ெஹர்பேரியம் மாதிரி, பெற்றோர்கள் ஆசிரியர் கழகம் சார்பில் மாணவர்களின் ஒப்புதல் பெற்று ஆசிரியர்கள் தேர்வு செய்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.