ADDED : ஆக 03, 2024 04:21 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தனுக்கா நிறுவனம் சார்பில், மங்களூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தில், படைப்புழு மேலாண்மை பற்றிய வெளிவளாக பயிற்சி நடந்தது.
பயிற்சியில்,திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார்.முனைவர் ஜெயகுமார், மக்காச்சோளத்தில் படைப்புழு அதன் மேலாண்மை குறித்து பேசினார். மேலும், ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டது.
முனைவர் மோதிலால், கோடை உழவு விதைநேர்த்தி, மண் வள மேம்பாடு குறித்து விளக்கி பேசினார். பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.