/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா
/
தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா
தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா
தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா
ADDED : ஜூன் 10, 2024 01:35 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா நேற்று நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தச கலச பூஜை, 108 சங்குக்கு விசேஷ பூஜை, திரவ்ய ேஹாமம், பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு மகா அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா, அறங்காவலரின் முகவர் மணிகண்டன், மண்டல பூஜை விழாக்குழு தலைவர் ரவி, துணைத் தலைவர் செல்லபெருமாள் உட்பட பலர் செய்திருந்தனர்.