/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
மங்களம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 12, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி மங்களம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவி அருணா 490, தர்ஷினி மற்றும் கிருஷ்ணவேணி 486, ஜனனி 485 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றனர். கணிதத்தில் 20 பேர், அறிவியல் 3 பேர், ஆங்கிலம் ஒருவர் என 24 பேர் 100க்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அவர்களை பள்ளி நிர்வாகி தமிழ்மணி, செயலாளர் அங்கையர்கண்ணி, அறக்கட்டளை தலைவர் கண்மணி, செயலாளர் ரத்தினா ராஜராஜன் மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து, பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.