ADDED : ஜூலை 02, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது
கூட்டத்திற்கு, சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் கலைச்செல்வி செல்வராஜ், பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன் முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் சக்திவேல் வரவேற்றார். துணை பி.டி.ஓ., கணபதி, பொறியாளர்கள் செந்தில், கிறிஸ்டோபர், சிலம்பரசன், திட்ட மேற்பார்வையாளர்கள் தனசேகரன், அனந்த கிருஷ்ணன், ராஜா, விஜய், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், அகிலா, பாப்பாத்தி ராமலிங்கம், கொளஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிலுவையிலுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது, புதிய திட்டப்பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.