ADDED : ஆக 20, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்,: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் 44ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி செடல் திருவிழா நடந்தது.
பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று காலை செடல் உற்சவத்தையொட்டி, ஓம்சக்தி கோவிலில் இருந்து தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி 108 பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றுனர்.
அம்னுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 20ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை விழாக்குழு பொதுச்செயலாளர் ராஜமாரியப்பன், செயலாளர் அம்பிகேஸ்வரன்,சிறப்பு தலைவர் வேலுசாமி, பொருளாளர் விக்னேஷ் செய்திருந்தனர்.

