நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே குடும்ப பிரச்னையில் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி அடுத்த பெரியாகுறிச்சி சின்னசாமி மகன் சிவக்குமார், 28; கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கும், புவனகிரி அடுத்த சேந்திரக்கிள்ளையை சேர்ந்த விஜயலட்சுமி, 24; என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. புவனகிரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், சிவக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த சிவக்குமார், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.