ADDED : மே 02, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மாவட்ட வங்கி ஊழியர் சங்க அலுவலகத்தில் மே தின விழா நடந்தது.
மாவட்டத் தலைவர் மீரா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராவ் சங்க கொடியை ஏற்றி வைத்தார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் ராதாகிருஷ்ணன், லட்சுமணன், சம்பத், எழிலேந்தி, ரமணி முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அமைப்பின் தலைவர் திருமலை, கலியபெருமாள், முருகேசன் வாழ்த்திப் பேசினர். மாலையில் நடந்த மே தின பேரணியில் வங்கி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் கோபு நன்றி கூறினார்.