ADDED : மே 01, 2024 11:43 PM

கடலுார் : கடலுார் தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
கடலுார் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., மற்றும் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில், மஞ்சக்குப்பம் தலைமை தபால் அலுவலகம் அருகில் பொதுக்கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கரன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் குளோப் தலைமை தாங்கினர். அரசு பணியாளர் நலச்சங்க மாநில இணைச் செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார். மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில செயலாளர் கண்ணகி மே தின உரையாற்றினர்.
கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குணசேகரன், பழனிவேல், சேகர், ஜீவானந்தம், சுப்ரமணியன், சீனுவாசன், ரமணி, ராதாகிருஷ்ணன், ராமசந்திரன், கோபு, அரிகிருஷ்ணன், வைத்தியலிங்கம், முருகையன், அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட இணை செயலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.
முன்னதாக அண்ணா பாலம் சிக்னல் அருகில் இருந்து மே தின விழா பேரணி துவங்கி லாரன்ஸ் ரோடு வழியாக மஞ்சக்குப்பம் பொதுக்கூட்ட மேடையை அடைந்தது.

