ADDED : மே 20, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த மாற்றுத் திறனாளி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் சுப்மணியன் மகள் திவ்யபாரதி, 18; மாற்றுத் திறனாளி. விருத்தாசலம் அரசு கல்லுாரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இறுதி தேர்வை எழுதிவிட்டு வருவதாக அவரது தாயிடம் மொபைல் போனில் கூறியிருந்தார். இந்நிலையில், மாணவி தேர்வுக்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

