/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மெகா சைஸ் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
/
மெகா சைஸ் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 25, 2024 11:59 PM

கடலுார்: கடலுாரில் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளங்களால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் இம்பீரியல் சாலையில் இருந்து சூரப்பநாயக்கன் சாவடி செல்லும் சாலை வழியாக, கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் ஒரு அடி ஆழத்திற்கு ஆங்காங்கே மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும், இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேன் ேஹாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி பள்ளத்தில் நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, குண்டும், குழியுமான சாலை மற்றும் பாதாள சாக்கடை மேன் ேஹாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

