/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உறுப்பினர் சேர்க்கை த.மா.கா., தீவிரம்
/
உறுப்பினர் சேர்க்கை த.மா.கா., தீவிரம்
ADDED : ஆக 13, 2024 09:39 PM

சிதம்பரம் : கடலுார் தெற்கு மாவட்ட த.மா.கா., சார்பில், சிதம்பரத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் தெற்கு வீதியில் த.மா.கா., சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார்.
மாநில சிறப்பு அழைப்பாளர் நாகராஜன், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன் உறுப்பினர் படிவத்தை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ராஜராஜன், மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் பாரி, பாலச்சந்தர், வட்டாரத் தலைவர் இளையபெருமாள், மாவட்ட மகளிரணி தலைவி சுப்புலட்சுமி, குமார் இன்பரசு துரைமுருகன், முட்லூர் குமார், துஷ்வந்த் சரவணன், சக்திவேல், வீரவேல், கணேஷ் , சாய் முரளி, விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நகர இளைஞரணி தலைவர் சிங்காரவேல் நன்றி கூறினார்.

