/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சொத்து வரியை குறைக்க வணிகர்கள் சங்கம் கோரிக்கை
/
சொத்து வரியை குறைக்க வணிகர்கள் சங்கம் கோரிக்கை
ADDED : மார் 07, 2025 07:03 AM

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சியில், தொழில் உரிமத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பண்ருட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் துணை சேர்மன் விஜய ரங்கன், வசந்தபவன் ஸ்வீட்ஸ் ஆறுமுகம், கார்த்திக், பா.ஜ., நிர்வாகி ரகு, கவுன்சிலர் வெங்கடேசன், மருந்து வணிகர் சங்கம் ராமு, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஆக்கிரமிப்பு அகற்றிய நகராட்சிக்கு நன்றி தெரிவிப்பது, தொழில் உரிமம் கூடுதல் கட்டண தொகை வசூலிக்காமல், பழைய வரியை பெற கேட்டுக்கொள்வது, சொத்து வரியை உயர்த்தாமல் குறைக்க வேண்டும்.
பண்ருட்டி நகராட்சிக்கு கடந்த 3 ஆண்டாக கமிஷனர் இல்லாமல் வளர்ச்சி பணிகள் பாதிப்பதால் நகராட்சி கமிஷனர் நியமிக்க, அரசுக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.