/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்திற்கு எம்.ஜி.ஆர்., இளைஞரணி கார்த்திகேயன் பிரசாரம்

ADDED : ஏப் 11, 2024 04:33 AM

கடலுார்: கடலுார் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.
கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கடலுார் அண்ணா விளையாட்டரங்கம், உழவர் சந்தை, திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
முன்னாள் கவுன்சிலர்கள் முத்துக்குமரன், ராமச்சந்திரன், புஷ்பநாதன், பிரேம் நசீர், பழனிச்சாமி, பகுதி துணை செயலாளர் முரளிதரன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜீ, துணை செயலாளர் ரவி, ஆனந்தராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணி முருகன், வினோத்குமார், நெசவாளர் பிரிவு குணசேகரன், தனசேகர், தங்கபாலா, சுப்பிரமணி, ராதாகிருஷ்ணன், இளங்கோ, பன்னீர், ஜெயபால் பன்னீர்செல்வம், மணி, அண்ணா தொழிற்சங்கம் நடராஜன், முத்து, பழனியப்பன், கோவிந்தராஜ், சுப்பராயலு, சேகர், பரணிதரன், இளங்கோ, மணிமாறன், கார்த்திக், ஜெயகரன், சந்துரு, தே.மு.தி.க., மாநகர செயலாளர் சரவணன், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.