
கடலுார்: கடலுார் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, பராசக்தி மாரியம்மன் கோவிலில் 59ம் ஆண்டு செடல் உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணியளவில் மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை மற்றும் காலை 9:00 மணியளவில் எல்லை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து ஏராளமான பெண்கள், புதுக்குப்பம் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து, ஊர்வலமாக பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து மதியம் 12:00 மணியளவில் கொடியேற்றம் மற்றும் இரவு 7:00 மணியளவில் திருக்கல்யாணம், அம்மன் வர்ணித்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து இரவு 9:00 மணியளவில் சிவன், பார்வதி வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து, இன்று செடல் உற்சவம்நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

