/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குள்ளஞ்சாவடியில் ' மினி ஸ்டேடியம்' இளைஞர்கள் மகிழ்ச்சி
/
குள்ளஞ்சாவடியில் ' மினி ஸ்டேடியம்' இளைஞர்கள் மகிழ்ச்சி
குள்ளஞ்சாவடியில் ' மினி ஸ்டேடியம்' இளைஞர்கள் மகிழ்ச்சி
குள்ளஞ்சாவடியில் ' மினி ஸ்டேடியம்' இளைஞர்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 08, 2024 12:28 AM

குள்ளஞ்சாவடி : தமிழகத்தில் சட்டசபை தொகுதி தோறும் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட குள்ளஞ்சாவடி அருகே வழுதலம்பட்டு ஊராட்சியில், 4 ஏக்கர் பரப்பளவில், 3 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஸ்டேடியத்தில் ஓடுதளம், அலுவலகம், கேலரி, பல்வேறு விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள், கழிவறை வசதிகள் என விளையாட்டு வீரர்களுக்காக பல வசதிகளுடன் ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. வழுதலம்பட்டு ஊராட்சியில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் மினி ஸ்டேடியம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து குள்ளஞ்சாவடி மற்றும், சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள விளையாட்டு ஆர்வமுள்ள இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.