/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.14 கோடியில் பிச்சாவரம் மேம்படுத்தும் பணி : அமைச்சர் ஆய்வு
/
ரூ.14 கோடியில் பிச்சாவரம் மேம்படுத்தும் பணி : அமைச்சர் ஆய்வு
ரூ.14 கோடியில் பிச்சாவரம் மேம்படுத்தும் பணி : அமைச்சர் ஆய்வு
ரூ.14 கோடியில் பிச்சாவரம் மேம்படுத்தும் பணி : அமைச்சர் ஆய்வு
ADDED : மார் 06, 2025 02:06 AM

கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், ரூ. 14 கோடியே, 7 லட்சம் மதிப்பில் நடந்து வரும் மேம்படுத்தப்படுத்தும் பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. உள்ளூர் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வளர்ச்சி கழகம் சார்பில், ரூ. 14 கோடியே 7 லட்சம் செலவில், சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
நிர்வாக கட்டடம், பூங்கா, உணவகம், தொலைநோக்கு கோபுரம், பயணிகள் நிழற்குடை, நடைப்பாதை, தங்கும் அறை, பார்வையாளர் கூடம், வாகன நிறுத்துமிடம் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவருடன், எம்.எல்.ஏ.,க்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், சப் கலெக்டர் கிஷன்குமார், சேர்மன்கள் மல்லிகா, பழனி, துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கலையரசன், டாக்டர் மனோகர், சங்கர், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது, தாசில்தார் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.