/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களூர் ஊராட்சியில் அமைச்சர் திடீர் ஆய்வு
/
மங்களூர் ஊராட்சியில் அமைச்சர் திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 19, 2024 04:51 AM

சிறுபாக்கம்: மங்களூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அமைச்சர் கணேசன் உத்தரவிட்டார்.
சிறுபாக்கம் அடுத்த மங் களூர் ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். ஒன்றிய தலைமையிடமாக உள்ளதால், பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு தேவைக்கு வந்து செல்கின்றனர். இருப்பினும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், மங்களூர் ஊராட்சியில் அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலைகளில் தேங்கிய கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்திட உத்தரவிட்டார். மேலும், தேரடி தெரு, நடுத்தெருவில் இருபுறம் கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் சரண்யா, ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், ஆத்மா குழு தலைவர் செங்குட்டுவன், பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, சண்முக சிகாமணி, பொறியாளர் மணிவேல், ஊராட்சி தலைவர் ராமு, தேவராஜ், துணைத் தலைவர் ரேகா ராஜசேகர், நிர்வாகிகள் திருவள்ளுவன், சேகர், ராமச்சந்திரன், சின்னதுரை உடனிருந்தனர்.