/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., கவுன்சிலர் திருமணம் அமைச்சர் உதயநிதி வாழ்த்து
/
தி.மு.க., கவுன்சிலர் திருமணம் அமைச்சர் உதயநிதி வாழ்த்து
தி.மு.க., கவுன்சிலர் திருமணம் அமைச்சர் உதயநிதி வாழ்த்து
தி.மு.க., கவுன்சிலர் திருமணம் அமைச்சர் உதயநிதி வாழ்த்து
ADDED : செப் 01, 2024 04:16 AM

கடலுார்: கடலூர் தி.மு.க., கவுன்சிலர் திருமணத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று வாழ்த்தினார்.
கடலூர் எல்.எஸ்.எஸ்.குரூப் கம்பெனி இயக்குனர் தினகரன்-கமலி தம்பதி மகனான கடலுார் மாநகராட்சி கவுன்சிலர் சரத். வேலுார் மாவட்டம் காட்பாடி பிச்சாண்டி-தாட்சாயிணி தம்பதி மகள் நிவேதிதா திருமணம் புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் உதயாநிதி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாரயணசாமி, அமைச்சர் மஸ்தான், புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், நெல்லிக்குப்பம் சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், விழுப்புரம் கனகராஜ், கவுதமசிகாமணி, முரளி, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் கலெக்டர்கள் சுப்ரமணியன், அருண்தம்புராஜ், பாஸ்கர், மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் தாமரைசெல்வன், மாவட்ட இளைஞரணி கார்த்தி, கணேஷ்குமார், ஆனந்து, சுமங்கலி சில்க்ஸ் நிஷ்டர் அலி, வக்கீல் சலீம், இன்ஜினியர் உமாசந்திரன், டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிராகஷ், வேலன் ஸ்டீல் வேல்முருகன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கிருஷ்ண ஆஸ்பிட்டல் நாகராஜன், ரோட்டரி ராசன், டாக்டர்கள், தொழிலதிபர்கள், கவுன்சிலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அமெரிக்கா சுற்றுப் பயணத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலின், மணமக்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.