/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
அமைச்சர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அமைச்சர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அமைச்சர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஆக 25, 2024 11:48 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கிளாங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வேளாண் உழவர்நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்தநாளையொட்டி தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, சேத்தியாத்தோப்பு தி.மு.க., நகர செயலாளர் பழனிமனோகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் கருணாநிதி,மாவட்ட பிரதிநிதி அன்பழகன், நகர இளைஞரணி சதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தினேஷ், வார்டு செயலாளர்கள் செந்தில், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா அனைவரையும் வரவேற்றனர். வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டியும், இனிப்புகளுடன் கொண்டாடி மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு புதிய எவர் சில்வர் தட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
இதில் தி.மு.க. உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஜெரினாபேகம் நன்றி கூறினார்.