/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாசி மக தீர்த்தவாரி எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
மாசி மக தீர்த்தவாரி எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மார் 13, 2025 12:44 AM

கடலுார் : கடலுார் அடுத்த நல்லவாடு கடற்கரை பகுதியில் மாசிமக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி, நல்லவாடு கடற்கரை பகுதியில் மாசி மக திருவிழா நடந்தது. நல்லவாடு மற்றும் சுற்றுவட்டார கிராம கோவில்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது.
விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து, பொது மக்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.
முன்னாள் எம்.பி., ராமதாஸ், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், சுப்பிரமணி, சண்முகம், அய்யனார், ரகு, ராம்குமார், குகேஷ்நாகமுத்து, வேணு வேலுச்சாமி உடனிருந்தனர்.