ADDED : ஆக 04, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட கோரி, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மனு கொடுத்தார்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடியை சந்தித்து, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மிகவும் பழமையான கட்டடம் ஆகும். இதனால் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளதால் ஒன்றிய அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.