/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் காங்., வேட்பாளர் ஆதரவு திரட்டல்
/
கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் காங்., வேட்பாளர் ஆதரவு திரட்டல்
கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் காங்., வேட்பாளர் ஆதரவு திரட்டல்
கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் காங்., வேட்பாளர் ஆதரவு திரட்டல்
ADDED : ஏப் 03, 2024 07:19 AM

திட்டக்குடி : கடலுார் தொகுதி காங்.,வேட்பாளர் விஷ்ணுபிரசாத், திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம், திட்டக்குடி, ஆவட்டி, மங்களூர் பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
கடலுார் தொகுதி காங்.,வேட்பாளர் விஷ்ணுபிரசாத், நேற்று திட்டக்குடி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தி.மு.க., திட்டக்குடி நகரசெயலாளர் பரமகுரு, மங்களூர் கிழக்கு ஒன்றியசெயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், ஆம்ஆத்மி மாவட்டசெயலாளர் ரமேஷ், இந்திய கம்யூ., நிர்வாகிகள் முருகையன், சுப்பிரமணியன், உலகநாதன், மா.கம்யூ.,நிர்வாகிகள் வரதன், மகாலிங்கம், வி.சி.,கட்சி நகரசெயலாளர் கவுதமன், குணத்தொகையன், மக்கள் நீதிமையம் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆவட்டியில் ஒன்றிய சேர்மன் சுகுணாசங்கர் தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் மாங்குளம் வெங்கடேசன், ராமதாஸ், அரியநாச்சி சேகர், பழனிவேல், புல்லுார் பரமசிவம், புடையூர் அழகுசாமி உள்ளிட்டோர் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்திற்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மங்களூர் பகுதியில் தி.மு.க.,நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட பிரதிநிதி குமணன், திருவள்ளுவன், ராமச்சந்திரன், அவைத்தலைவர் சேகர், துணைசெயலாளர் கேசவன், தனபால் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் காங்.,வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆதரவு திரட்டினார்.

