ADDED : ஏப் 30, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவைகள், வீடுகளின் உள்ளே புகுந்து, உணவுப் பொருட்களை வீணாக்கி வருகிறது. மேலும் சிறுவர்கள், பள்ளி மாணவர்களை கடிக்கப் பாய்வதால், மாணவர்கள், சிறுவர்கள் அச்சத்துடன் சென்றுவரும் நிலை உள்ளது.
எனவே இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, குரங்குகளை பிடித்து அகற்ற, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

