தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மொபட் திருடியவர் கைது

மொபட் திருடியவர் கைது

மொபட் திருடியவர் கைது


ADDED : மே 23, 2024 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் டி.வி.எஸ்., மொபட் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கொய்யாதோப்பு பகுதியை சேர்ந்தவர் மணி, 55; இவர், கடந்த 10ம் தேதி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே டி.வி.எஸ்.,மொபட்டை நிறுத்திவிட்டு மெடிக்கலில்மருந்து வாங்கினார். சிறிது நேரத்தில் திரும்பிவந்து பார்த்தப்போது டி.வி.எஸ்., மொபட்டை காணவில்லை.

இதுகுறித்து, மணி கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

அதில், சிதம்பரம் அடுத்த கத்திரிமேடு கிராமத்தை சேர்ந்த செல்வம், 55; என்பவர், டி.வி.எஸ்., மொபட் திருடியது தெரியவந்து, நேற்று அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us