ADDED : ஜூன் 26, 2024 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம், : பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா மணிவண்ணன் தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயிகள் சத்தியமூர்த்தி, கலைவாணன், கால்நடை வளர்ப்போர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பெண்ணாடம் கால்நடை மருந்தக மருத்துவர் சங்கவை, கால்நடை ஆய்வாளர் பொன்வேலன் ஆகியோர் கொண்ட குழுவினர் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.