ADDED : ஜூலை 07, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில், கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.
தற்போது, 2026 - 27 ம் ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில், நேற்று கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.
சிதம்பரம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கமலக்கண்ணன் தலைமையில், கால்நடை டாக்டர்
தாமோதரன் பங்கேற்று, கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தினார். உதவியாளர் ருக்லுதீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
