தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இறந்த குட்டியுடன் தாய்குரங்கு விருதையில் பாசப்போராட்டம்

இறந்த குட்டியுடன் தாய்குரங்கு விருதையில் பாசப்போராட்டம்

இறந்த குட்டியுடன் தாய்குரங்கு விருதையில் பாசப்போராட்டம்


ADDED : ஆக 05, 2026 03:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 03:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இறந்த குட்டியை மார்பில் சுமந்தபடி தாய் குரங்கின் பாசப்போராட்டம் கண்கலங்கச் செய்தது.

மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களிடத்திலும் தாய்மை மேலோங்கி நிற்கிறது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் குட்டிக்குரங்கு ஒன்றை தாய் குரங்கு சுமந்தபடி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது.

அப்போது, தனது மார்புடன் அணைத்து வைத்திருந்த குட்டிக்குரங்கு பலத்த ரத்தக் காயத்துடன் இறந்திருப்பது தெரிந்தது. இறந்த குட்டியை பிரிய மனமில்லாத குரங்கு, அதனை மார்போடு அணைத்தபடி சுற்றித்திரிந்தது தெரிந்தது.

ஒருவழியாக மணிமுக்தாற்றின் கரையோர புதரில் இறந்த குட்டியை வைத்துவிட்டு, தாய் குரங்கு அங்கிருந்து சென்றது. தாய் குரங்கின் பாசப்போராட்டம், அப்பகுதியில் பஸ்சிற்கு காத்திருந்த பயணிகள், பாதசாரிகளை கண்கலங்கச் செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us