/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அன்னை தெரசா பொறியியல் கல்லுாரி வெள்ளி விழா
/
அன்னை தெரசா பொறியியல் கல்லுாரி வெள்ளி விழா
ADDED : ஜூன் 25, 2024 05:17 AM

கடலுார், : திருநாவலுார் அன்னை தெரசா பொறியியல் கல்லுாரியில் வெள்ளி விழா மற்றும் 21ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் பிரகாஷ்முல் சோர்டியா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் தினேஷ்குமார் சோர்டியா, இயக்குனர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரான கடலுார் ரோட்டரி துறைமுக நகர சங்க தலைவர் பூங்குன்றன், மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் பட்டங்கள் வழங்கினார். வெள்ளி விழாவையொட்டி நடந்த விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், அண்ணா பல்கலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மாணவர்கள் தங்கள் திறமைகளை வேலை கிடைத்தவுடன் நிறுத்திக்கொள்ளாமல் திறமைகளை மேன்மேலும் வளர்த்து கொண்டு வளர வேண்டும் என்றார்.
விழாவில் துறை தலைவர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறை தலைவர் வடிவுக்கரசி நன்றி கூறினார்.