/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையோர முட்புதர்களால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
சாலையோர முட்புதர்களால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : மே 24, 2024 05:18 AM

சேத்தியாத்தோப்பு: சென்னை-கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பு வெள்ளாறுராஜன் வாய்க்கால் கரையில் படர்ந்துள்ள முட்புதர்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை-கும்பகோணம் சாலை, சேத்தியாத்தோப்பு வெள்ளாறுராஜன் கரையில் அதிகளவில் முட்புதர்கள் மண்டியுள்ளது. இந்த சாலையில் கும்பகோணம், தஞ்சாவூர். திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
சாலையோரம் புதர்கள் வளர்ந்துள்ளதால் எதிரெதிரில் வாகனங்கள் வரும்போது, வாகனங்கள் சாலையோரம் செல்லும்போது, முட்புதர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் சாலையோர முட்புதர்களை நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது அகற்றி வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக புதர்களை அகற்றாததால் முட்களும், செடிகளும் வளர்ந்து சாலைவரை படர்ந்துள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோரம் படர்ந்துள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.