/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பணி கிடப்பில் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலை பணி கிடப்பில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 09, 2024 05:29 AM

புவனகிரி: புவனகிரி அருகே ஆலம்பாடி செல்லும் சாலையிலிருந்து பூ.மணவெளி வழியாக விருத்தாசலம் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட சாலை நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
புவனகிரி அடுத்த ஆலம்பாடி மெயின் சாலையில் இருந்து பூமணவெளி, பூதவராயன் பேட்டை வழியாக விருத்தாசலம் சாலையை இணைக்கும் வகையில் கிளை சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சலையில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் இருந்தது.
இதனால் சுற்றுபகுதியினர் மற்றும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் மிகுந்த அவதியடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.
அதன் எதிரொலியாலும், அப்பகுதியினர் கோரிக்கையின் பேரிலும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நிதி ஒதுக்கி தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது. சாலையை கொத்தி பழைய ஜல்லியை பயன்படுத்தி சாலை அமைத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
பணி கிடப்பில் போட்டப்பட்டுள்ளதால் சுற்றுபகுதியினர் மற்றும் மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே துவங்கி கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை விரைந்து முடிக்க சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.