/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி பொதுத்தேர்வில் சாதனை
/
மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2024 11:26 PM

கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி தொடர்ந்து 6 ஆண்டுகளாக சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாணவன் ஆதர்ஷ் 452 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி மதுரா 439 பெற்று இரண்டாமிடம், மாணவர் தேசிகன் 438 பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
இதேபோன்று, பத்தாம் வகுப்பில் மாணவர் கந்தவேல் 476 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ேஷஜல்ஜெயின் 462 பெற்று இரண்டாமிடம், மாணவர் சஞ்சய் 456 பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
கணித பாடத்தில் மாணவர் சஞ்சய் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கவிதா கண்ணன், பள்ளி முதல்வர் அப்துல் சுபஹான் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.