/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதி பெறாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால் நடவடிக்கை பாயும் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

ADDED : மே 03, 2024 11:44 PM

நெல்லிக்குப்பம், - அனுமதி பெறாமல் செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களை இயக்கும் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கமிஷனர் கிருஜ்ணராஜன் கலந்து கொண்டு செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களை இயக்க நகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெறாமல் வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுத்தம் செய்யும் பணியை செய்பவர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலமே சுத்தம் செய்ய வேண்டும்.
கழிவுநீரை பொது இடங்களில் ஊற்றாமல் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் சேர்ப்பித்து சுத்திகரிப்பு செய்ய அறிவுறுத்த வேண்டுமென கமிஷனர் கூறினார்.
இன்ஜினியர் வெங்கடாஜலம், துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.