/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடாவடி வரி வசூல் மா.கம்யூ., கண்டனம்
/
அடாவடி வரி வசூல் மா.கம்யூ., கண்டனம்
ADDED : மார் 09, 2025 05:58 AM
கடலுார் : கடலுாரில் மாநகராட்சியின் அடாவடி வரி வசூல் கண்டித்தக்கது என, மா.கம்யூ., கூறியுள்ளது.
கடலுார் மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாநகராட்சி, வரிகளை பல மடங்கு உயர்த்தி உள்ளது.
ஏழை எளிய மக்கள், வியபாரிகளுக்கு போதுமான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் வரி வசூல் பாக்கி என்ற பெயரால் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பது, கடைகளுக்கு முன்பாக குப்பை கொட்டுவது. உரிமையாளரிடம் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது உரிமையாளர்களை மன உளச்சளுக்கு ஆளாக்கி வருகிறது.
மஞ்சகுப்பம் செந்தாமரை நகரில் வீட்டின் படிக்கட்டுகளை இடிப்பது, வரதராஜன் பிள்ளை நகரில் வீட்டின் முன் பெரிய பள்ளம் தோண்டுவது போன்ற அடாவடியான செயல்களில் ஈடுப்படுவதை கடலுார் மா.கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது.
எனவே, வீடுகள், கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வை குறைத்து, வரி வசூல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.